சிங்கப்பூர் - மலேசியா அதிவிரைவு ரயில் திட்டம் விரைவில் கையெழுத்தாகும்

சிங்கப்பூர் - மலேசியா அதிவிரைவு ரயில் திட்டம் விரைவில் கையெழுத்தாகும்

1 mins read

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அதிவிரைவு ரயில் திட்டம் தொடர்பான உடன்பாடு அடுத்த வாரம் கையெழுத்தாகும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் நஜிப் பும் நேற்று முன்தினம் நடைபெற விருந்த தலைவர்களின் ஓய்வு தளச் சந்திப்பின்போது அந்த உடன்பாடு கையெழுத்தாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட் டது.

"இத்திட்டம் பற்றி சிங்கப்பூர் அதிபருக்கு விளக்கம் அளித்து அவரின் ஒப்புதல் பெற கூடுதல் காலம் தேவைப்படுகிறது என்று பிரதமர் லீ கேட்டுக் கொண்டார்," என்று திரு நஜிப் இஸ்கந்தர் மலேசியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாக 'உத்து சான் டெய்லி' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அடுத்த வாரம் எந்த நாளில் கையெழுத்துச் சடங்கு நடைபெறும் என்று மலேசியப் பிரதமர் தெரி விக்கவில்லை.