எரிசக்தி நிறுவன அதிகாரி கைது; லஞ்ச, ஊழல் தடுப்புத் துறை நடவடிக்கை

எரிசக்தி நிறுவன அதிகாரி கைது; லஞ்ச, ஊழல் தடுப்புத் துறை நடவடிக்கை

1 mins read

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் எரிசக்தி நிறுவனம் ஒன்று தனது நிர்வாக இயக்குநர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. லஞ்ச, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் திரு மோக் வெங் வாய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசிபிக் ரேடியன்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது.

"திரு மோக் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட வில்லை. அத்துடன், அவர் கைது செய்யப்பட்ட அதே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அதன் அறிக்கையில் அந்த நிறுவனம் விளக்கியது. "லஞ்ச, ஊழல் புலனாய்வு மன்றத்தின் விசாரணை தொடர்வதால் இது குறித்து மேல் விவரங்கள் எதுவும் தெரிவிக்க முடியாத நிலையில் இயக்குநர் சபை உள்ளது. இந்த விசாரணையின் தொடர்பில் முக்கிய தகவல்கள் தெரி யும் பட்சத்தில் பங்குதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அதுபற்றி குறித்த நேரத்தில் அறிவிப்புகள் வெளி யிடப்படும்," என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் கூறியது.