வெடிகுண்டுப் புரளி கிளப்பியதற் காக ஆடவர் ஒருவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. சிட்டி ஹால் எம்ஆர்டி நிலை யத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக சமூக ஊடகத்தில் புரளி கிளப்பி விடப்பட்டதால் 18 எம்ஆர்டி நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. பொதுப் போக்குவரத்து பாது காப்புத் தளபத்தியத்தின் 95% மனிதவளம் அதற்காகப் பயன் படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 14ல் நிகழ்ந்தது. tagged.com என்ற இணையத்தளத்தில் அந்தப் புரளி யை கிளப்பிவிட்டதற்காக ஸி காய் ஸுவான் என்ற 23 வயது ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வெடிகுண்டுப் புரளி; 18 மாதச் சிறை
1 mins read

