சிங்கப்பூரில் உள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்காக புதிய பயிலகம் ஒன்று அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. அந்தப் பயிலகத்தில் அவர்கள் தங்கள் நிபுணத்துவத் திறன்களை யும் விளையாட்டுப் பயிற்றுவிப்பில் தங்களுக்குள்ள தரத்தையும் மேம் படுத்திக்கொள்வார்கள். 'கோச்எஸ்ஜி' என்று அழைக் கப்படும் இந்தப் பயிலகத்துக்கு சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத் தின் பயிற்றுவிப்பாளர் மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் திரு ட்ரோய் எங்கல் தலைவராக இருப்பார். பயிற்றுவிப்பாளர்களுக்குத் தேவைப்படும் வகுப்பறைப் பாடங்க ளும் வகுப்புக்கு வெளியே உள்ள செயல்முறை பாடங்களும் வடிவ மைக்கப்படும். அவை மூலம் அவர்கள் தொழில்நுட்ப ஆற்றல்களையும் கற்பிப்பு வழிகாட்டிகளையும் பெருக்கிக்கொள்வார்கள்.
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மேம்பட புதிய பயிலகம்
1 mins read

