அச்சே நிலநடுக்கம்: செஞ்சிலுவைச் சங்கத்தின் $50,000 நன்கொடை

1 mins read

இந்தோனீசியாவின் அச்சே மாநி லத்தில் நேற்று முன்தினம் காலை யில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், சிங்கப்பூர் செஞ்சிலு வைச் சங்கம் $50,000 மதிப்புள்ள உதவிப் பொருட்களை அளிக்க உறுதியளித்துள்ளது.

பாலாங் மேரா இந்தோனீசியா எனப்படும் இந்தோனீசியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் தேடு தல், மீட்பு, திரும்பப் பெறுதல் நட வடிக்கைகளுக்கு மேற்குறிப்பிட்ட நன்கொடை உதவியாக இருக்கும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் நம்பிக்கை தெரிவித்தது. இந்தோனீசிய அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து பாலாங் மேரா இந்தோனீசியா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்க அனைத்து முயற்சிகளை யும் எடுத்து வருகிறது. பிடி ஜெயா மாவட்டத்தை உலுக்கிய 6.5 ரிக்டர் அளவி லான நிலநடுக்கத்தில் 102 பேர் மாண்டனர்.