வீவகவின் அருகாமை வீட்டு மானிய திட்டத்துக்கு அமோக ஆதரவு

வீவகவின் அருகாமை வீட்டு மானிய திட்டத்துக்கு அமோக ஆதரவு

1 mins read
11a96da3-fbd4-408d-bd51-392651338930
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 'அருகாமை வீட்டு மானிய திட்டம்' என்ற திட்டத்தை ஓராண்டுக்கு முன் அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தில் இதுவரையில் $83 மில்லியன் தொகை மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றும் 4,300க்கும் அதிக குடும்பங்கள் பயனடைந்து இருப்பதாகவும் கழகம் தெரிவித்திருக்கிறது. அருகாமை வீட்டு மானிய திட்டத்திற்குக் கிடைத்து வரும் ஆதரவு மிகவும் ஊக்கமூட்டுவ தாக இருக்கிறது என்று கழகம் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரர்கள் தங்களுடைய பெற்றோருடன் அல்லது மணமான பிள்ளைகளுடன் அல்லது அவர் களுக்கு அருகே மறுவிற்பனை வீடு ஒன்றை வாங்க இந்தத் திட்டம் மானியம் வழங்குகிறது.

சிங்கப்பூரர்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது மணமான பிள்ளைகள் வசிக்கும் வீடுகளுக்கு அருகே புதிய வீவக அடுக்குமாடி வீட்டை வாங்க உதவும் இதர ஏற்பாடுகளுக்கு இந்தச் செயல் திட்டம் ஓர் உறுதுணையாக இருக் கிறது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.