தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாடப் புத்தகத்தைப் பகிர்வோம் திட்டம்: 20,000 வசதியற்ற பிள்ளைகளுக்கு உதவி

1 mins read
c0d9b0ea-6320-4a8c-9e27-c854aa7a6ad2
-

நன்கொடையாக வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள், 'பாடப் புத்தகத் தைப் பகிர்ந்துகொள்வோம்' என்ற செயல்திட்டத்தின்கீழ் உதவி தேவைப்படும் 20,000 பிள்ளை களுக்கு வழங்கப்பட்டன. என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறு வனம் ஆண்டுதோறும் பழைய பாடப் புத்தகங்களைத் தன்னுடைய கடைகளில் சேகரித்து, அவற்றை சிங்கப்பூர் முழுவதும் விநியோக நிலையங்களுக்குச் கொண்டு சென்று மாணவர்களுக்கு வழங் குகிறது. இந்தச் செயல்திட்டம் 34 ஆண்டுகளாக இடம்பெற்று வரு கிறது. வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கான பாடப் புத்தகச் செலவைத் தவிர்ப்பது, புத்தகங் களை மறுபடியும் புழக்கத்திற்கு விடுவது ஆகியவை இந்தச் செயல்திட்டத்தின் நோக்கங்கள். உதவி தேவைப்படும் பிள்ளை களுக்குப் புத்தகங்கள் கிடைப் பதை உறுதிப்படுத்தும் வகையில் 20,000 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

பண உதவி தேவைப்படும் குடும்பங்கள், பிள்ளைகளின் பாடப் புத்தகங்களுக்கான செலவைக் குறைக்க உதவும் 'பாடப் புத்தகத்தைப் பகிர்வோம்' என்ற திட்டத்தின் கீழ் சிட்டி ஸ்குவேர் மால் உள்ளிட்ட ஐந்து இடங்களில் புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. படம்: என்டியுசி ஃபேர்பிரைஸ்