வீவக புளோக்குகளில் 'கான்கிரீட்' பெயர்ந்து விழுவதைத் தடுக்க ஏற்பாடு

வீவக புளோக்குகளில் 'கான்கிரீட்' பெயர்ந்து விழுவதைத் தடுக்க ஏற்பாடு

1 mins read

ஹவ்காங், சர்க்கியூட் ரோட்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் 'கான்கிரீட்' பகுதிகள் அண்மையில் கீழே விழுந்த இரண்டு சம்பவங்கள் பற்றிய விசாரணை முடிவடைந்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் இருக்க அந்தப் புளோக்குகளுக்குப் பொறுப்பு வகிக்கும் நகர மன்றங்கள் பல நடவடிக்கைகளை எடுக்கின்றன. சர்க்கியூட் ரோட்டில் இருக்கும் புளோக் 51ன் 'கான்கிரீட்' பகுதி அக்டோபர் மாதம் பெயர்ந்து விழுந்தது. அதற்கு அடுத்த மாதம் ஹவ்காங் அவென்யூ 10ல் இருக்கும் புளோக் 449ல் அரைச் சாந்து தரையில் விழுந்துவிட்டது.