சிங்கப்பூரில் பாதசாரிகள் சாலை களில் கண்டபடி குறுக்கே நடந்து அதன் விளைவாக நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி மரணம் அடைந்த, காயம் அடைந்த சம்ப வங்களின் எண்ணிக்கை 2014ல் 195 ஆக இருந்தது. இது 2015ல் 230 ஆக அதிக ரித்துவிட்டது. இத்தகைய விபத்து களின் எண்ணிக்கை 2011ல் 317 ஆக இருந்தது. அதற்கும் அடுத்த ஆண்டில் குறைந்தது என்றாலும் சென்ற ஆண்டில் இது மீண்டும் அதிக ரித்துவிட்டது. சிங்கப்பூர் போலிஸ் இந்த விவ ரங்களைத் தெரிவித்திருக்கிறது. போக்குவரத்து போலிஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 7,400 எச்சரிக்கைகளை அல்லது அழைப்பாணைகளை இத்தகைய பாதசாரிகளுக்குப் பிறப்பித்தது. சாலைகளில் போக்குவரத்து விளக்குகளை மதிக்காமல் கண்ட படி குறுக்கும் நெடுக்குமாகச் சாலைகளைக் கடப்பது குற்ற மாகும்.
கண்டபடி சாலையைக் கடத்தல்: மரணங்கள், காயம் அடைந்த விபத்துகள் அதிகரிப்பு
1 mins read
-

