ஜனவரி முதல் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் துப்புரவு நடவடிக்கைகள்

ஜனவரி முதல் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் துப்புரவு நடவடிக்கைகள்

1 mins read
dd0a36b1-7f45-4f13-bb2b-fa7f8df5b9fc
-

வரும் ஜனவரி மாதத்திலிருந்து தொடக்கப் பள்ளிகள் முதல் தொடக்கக் கல்லூரிகள் வரை ஒவ்வொரு நாளும் அவற்றில் துப்புரவு நடவ டிக்கைகள் இடம் பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்துப் பள்ளிகளும் புத்தாண்டில் திறக்கப்படும் போது, மாணவர்கள் துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன என்றும் அமைச்சு குறிப்பிட்டது. வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை மாணவர்களிடத்தில் ஏற்படுத்துவது இந்த புதிய நடவடிக்கை அறிமுகப்படுத்தப் படுவதன் நோக்கமாகும். நாள்தோறும் என்னென்ன துப்பரவு நடவடிக்கைகள், அவை அந்நாளின் எந்த நேரத்தில் இடம்பெறும் என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்ய லாம். இது குறித்து அறிவிப்பு இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. தற்போது சிங்கப்பூரில் தொடக்கநிலை முதல் தொடக்கக் கல்லூரி வரை 365 பள்ளிகள் உள்ளன. அவற்றுள் சில பள்ளிகள் இவ்வாண்டிலேயே தங்கள் துப்புரவு நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டன.