மொத்த சில்லறை வர்த்தகம் அக்டோபர் மாதத்தில் 2.2% கூடியது

மொத்த சில்லறை வர்த்தகம் அக்டோபர் மாதத்தில் 2.2% கூடியது

1 mins read

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபரில் 2.2% கூடியது. இந்த அதிகரிப்பிற்கு கார் விற்பனையே முக்கிய காரணமாக இருந்தது. புள்ளி விவரத்துறை வெளியிட்ட அறிக்கை மூலம் இது தெரியவருகிறது. கார் விற்பனையை நீக்கி விட்டுப் பார்த்தால் ஆண்டுக் காண்டு அடிப்படையில் அக்டோபர் மாத்தில் சில்லறை வர்த்தகம் 0.3% இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இருந் தாலும் செப்டம்பருடன் ஒப்பிடுகை யில் அக்டோபரில் மேம்பாடு காணப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் மொத்த சில்லறை வர்த்தகம் 1.8% குறைந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் மொத்த சில்லறை வர்த்தகம் ஆண்டுக் காண்டு அடிப்படையில் 2.2% கூடியது. செப்டம்பருடன் ஒப் பிடுகையில் நவம்பரில் சில்லறை வர்த்தகம் 1.7% கூடியது.