பாதுகாப்புச் சட்டத்தை மீறினால் அதிக அபராதம்

பாதுகாப்புச் சட்டத்தை மீறினால் அதிக அபராதம்

1 mins read

வேலையிடத்தில் ஊழியர்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் முதலாளிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கலாம். வேலையிடப் பாதுகாப்பு, சுகா தாரச் சட்டத்தின்படி இதுநாள்வரை விதிக்கப்பட்டு வந்துள்ள அபரா தங்கள் மிகவும் குறைவாக உள்ள தென்றும் அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர்களின் முறை யீட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி சீ கீ ஊன், குற்றத்தின் தன்மை, அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு வழக்கிலும் குறைந்த, நடுத்தர அல்லது உயர் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். உதாரணமாக, குற்றத்தன்மை அதிகமுடைய, உயர் பாதிப்பு விளைவிக்கின்ற செயல்களுக்கு ஒரு நிறுவனத்துக்கு $300,000 லிருந்து $500,000வரை அபராதம் விதிக் கப்படலாம்.