தற்போதைய இடத்திலிருந்து வெளியேறுமாறு ஆலோசனை

தற்போதைய இடத்திலிருந்து வெளியேறுமாறு ஆலோசனை

1 mins read

அரசாங்க நிலத்தை அனுமதியின்றி பயன்படுத்தி வரும் ஸ்ரீ தண்டவாள முனீஸ்வரன் சந்நிதி, வேறு இடத் திற்கு மாறிச் செல்லும்படி சிங்கப்பூர் நில ஆணையம் அறி வுறுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு ஆலோசனை குறிப்பைச் சந்நிதியின் நிர்வாகி களுக்கு அளித்த ஆணையம், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் சந்நிதிக்கு அளிக் கத் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மலேயன் ரயில்வே ஊழியர் களின் வசிப்பிடமாக முன்பு திகழ்ந்த 451A குவீன்ஸ்வே பகுதி யில் 1990ஆம் ஆண்டு அந்த ஊழியர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சந்நிதி, அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது என்றும் அங்கிருந்து வெளியேறு மாறு சிங்கப்பூர் நில ஆணையம் 2011ஆம் ஆண்டிலிருந்து கூறி வருகிறது.