செந்தோசா தீவுக்கு செந்தோசா நடைபாதை வழியாக இலவச மாக நடந்து செல்லும் சலுகை அடுத்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று செந்தோசா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. 'கேளிக்கை, அறிவார்ந்த நிலையான செந்தோசா' எனும் நோக்கத்தில் அடிப்படையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது கார்களற்ற சமூகத்தை உருவாக்கும் தேசிய முயற்சியின் ஓர் அங்கமாகவும் அமைகிறது. "செந்தோசா நடைபாதை சிங்கப்பூர் நிலப்பாதையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இந்தச் சலுகையின் நீட்டிப்பால் மேலும் அதிகமானோர் குறிப்பாக உச்ச நேரத்தில், நடந்து சென்று செந்தோசா தீவின் அழகைக் கண்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறோம்," என்றார் செந்தோசா வளர்ச்சிக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
2017 இறுதிவரை செந்தோசாவுக்கு இலவசமாக நடந்து செல்லலாம்
1 mins read

