பக்கத்து வீட்டுக்காரரின் கார் மீது குப்பைகளைப் போட்ட மாது

பக்கத்து வீட்டுக்காரரின் கார் மீது குப்பைகளைப் போட்ட மாது

1 mins read
eb7468f9-8f20-41e4-b0c2-1c86d2cc148d
-

மூன்று மாத காலமாக பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் கார் மீது குப்பைகளைத் திரும்பத் திரும்ப தூக்கிஎறிந்த இந்தோனீசிய மாது ஒருவருக்கு நேற்று $1,500 அபராதம் விதிக்கப்பட்டது. தேபான் கார்டன்ஸ் ரோட்டில் இருக்கும் புளோக் 34ன் அருகே உள்ள திறந்தவெளி கார்பேட்டை யில் ஏப்ரல் 22ஆம் தேதிக் கும் ஜூலை 24ஆம் தேதிக்கும் இடையில் இத்தகைய காரியத்தைச் செய்து அதன்மூலம் திருவாட்டி சுவா சியோவ் சின், 33, என்ற மாதை சட்டத்திற்குப் புறம்பான முறையில் அலைக்கழித்ததாக லிண்டா, 40, என்ற அந்த இந்தோனீசிய குடும்பமாது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.