மலேசியாவில் இணையக் காதல் தில்லுமுல்லு தொடர்பில் சிங்கப்பூரரான ஒரு மாது உட்பட 14 சந்தேகப்பேர்வழிகள் கைதாகி இருக்கிறார்கள். அந்த 14 பேரும் 84 மாதர்களை வசியப்படுத்தி அவர்களிடம் இருந்து $11 மில்லியன் தொகையை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பிடிபட்டவர்களில் 10 பேர் ஆடவர்கள். அந்த ஆடவர்களில் 9 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சியாரா லியோன் நாட்டைச் சேர்ந்தவர். கைதான நான்கு மாதர்களில் 43 வயது சிங்கப்பூரர் ஒருவர் என்றும் மற்ற மூவரும் மலேசியர்கள் என்றும் ஷின் மின் டெய்லி செய்தித்தாள் தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூர் மாது உட்பட 14 பேர் மலேசியாவில் கைது
1 mins read

