சுயதீவிரவாத மனப்போக்கு: ஐந்து பணிப்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சுயதீவிரவாத மனப்போக்கு: ஐந்து பணிப்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

1 mins read

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரில் பணிபுரிந்த ஐந்து வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சுயதீவிரவாதப் போக்கைக் கடைப் பிடித்துள்ளனர். எனினும், அந்த நேரத்தில் அவர்கள் உடனடிப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுடைய நாட்டு அதி காரிகளுக்கு அது பற்றித் தெரிவிக்கப்பட்ட பின்னர், அவர்கள் தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என அமைச்சு கூறியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 வெளிநாட்டினர் விசாரிக்கப் பட்டனர் என்றும் அமைச்சு தெரி வித்தது.

இந்தோனீசியாவின் பயங்கர வாத எதிர்ப்பு அதிரடி போலிசார் கடந்த வாரம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிப்படும் நான்கு பெண்களைக் கைது செய்ததைத் தொடர்ந்து அமைச்சின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.