கிரஸ்ட் பள்ளியில் 98% மாணவர் தேர்ச்சி

கிரஸ்ட் பள்ளியில் 98% மாணவர் தேர்ச்சி

1 mins read

வழக்கநிலை தொழில்நுட்ப மாண வர்களுக்காகவே செயல்படும் முதல் தனிப் பள்ளியான கிரஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் 98 விழுக் காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். வழக்கமான மாணவர்களைப் போல நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 'என்' நிலைத்தேர்வு எழு தும் இவர்கள் தொழிற்கல்வியிலும் பயிற்சி பெறுகின்றனர்.

இது, கிரஸ்ட் பள்ளியின் தனிச் சிறப்பாகும். சில்லறை விற்பனைத் துறை சேவை, இயந்திரவியல் சேவை, விருந்தோம்பல், அடிப்படை வசதி களுக்கான சேவை ஆகிய திறன் களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 'ஐடிஇ' சான்றிதழுடன் வெளியேறுகின்ற னர் இதன் காரணமாக இந்தப் பள்ளியைச் சேர்ந்த 100 விழுக்காடு மாணவர்களுக்கு 'ஐடிஇ' சிறப்புக் கல்லூரி மாணவர் சேர்ப்புத் திட் டத்தின் கீழ் மேற்கல்வியைத் தொடர முன் நிபந்தனையுடன் வாய்ப்பு வழங்கப்பட்டது.