டிசம்பர் 29ல் சேவையைத் தொடங்கும் பொங்கோல் பாய்ண்ட் எல்ஆர்டி நிலையம்

டிசம்பர் 29ல் சேவையைத் தொடங்கும் பொங்கோல் பாய்ண்ட் எல்ஆர்டி நிலையம்

1 mins read
Google News Preferred Icon

பொங்கோல் குடியிருப்பாளர்கள் குறிப்பாக பொங்கோல் செவன் டீன்த் அவென்யூவில் வசிப்பவர்கள் விரைவில் நகர மையத்துடன் இணைக்கும் ரயில் நிலைய சேவையைப் பெறவிருக்கின்றனர். டிசம்பர் 29ஆம் தேதியிலிருந்து பொங்கோல் பாய்ண்ட் எல்ஆர்டி நிலையம் செயல்படத் தொடங்கு கிறது. சாம் கீ, நிபோங், சுமாங், சூ டெக் ஆகிய நிலையங்களையும் பொங்கோல் இலகு ரயில் பாதையையும் பொங்கோல் நகர மையத்தையும் இந்தப் புதிய பொங்கோல் பாய்ண்ட் எல்ஆர்டி நிலையம் இணைக்கும். இதனை வரவேற்ற அவ்வட்டார குடியிருப்பாளர்களில் ஒருவரான ஜார்ஜ் சிவ், 67, பொங்கோல் பாய்ண்ட் நிலையம் திறக்கப்பட்டால் வேலைக்கு பொதுப் போக்குவரவை பயன்படுத்துவேன் என்றார்.