சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே. பரதன், தலைமை நடவடிக்கை அதிகாரி என். ரவீந்திரன், சமூக ஈடுபாடு, தொண்டூழிய நிர்வாகத்தின் வினோத்குமார், இளம் தொண்டூழியர் சந்திரன் ஆகியோரை அதிபர் டோனி டான் கெங் யாம் சந்தித்தார். சமூகத்திற்கு சுய உதவிக் குழுக்கள் ஆற்றும் பங்குக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நேற்று இஸ்தானாவில் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகிகள், ஊழியர்கள், தொண்டூழியர்களுக்குத் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் மெண்டாக்கி, யுரேசியர் சங்கம் உள்ளிட்ட மற்ற சுய உதவி குழுக்களும் பங்கேற்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தொண்டூழியர்களுக்குத் தேநீர் விருந்து
1 mins read

