பிஎஸ்எல்இ: உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் தகுதி மதிப்பெண் குறைந்தது

பிஎஸ்எல்இ: உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் தகுதி மதிப்பெண் குறைந்தது

1 mins read
14296a03-d1dd-4b5d-878d-0b828c2db49a
-

பிரபல உயர்நிலைப் பள்ளிகளின் உயர்நிலை ஒன்று குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் இவ்வாண்டு சிறிது குறைந்துள்ளது. இவ்வாண்டு பிஎஸ்எல்இ, தொடக்கநிலை இறுதி ஆண்டுத் தேர்வில் சாதனை அளவில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த போதும் பல பிரபல உயர்நிலைப் பள்ளிகளின் நுழைவுத் தகுதி மதிப்பெண்கள் சற்றே சரிந் துள்ளன.

இவ்வாண்டு பிஎஸ்எல்இ தேர்வு எழுதிய மாணவர்களில் 98.4% பேர் உயர்நிலைப் பள்ளிக ளுக்குச் செல்லும் அளவுக்கு தேர்ச்சி அடைந்தனர். சிங்கப்பூரில் பிஎஸ்எல்இ தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை. எனினும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான, குறிப்பாக பிரபல பள்ளிகளுக்குச் செல்வதற் கான நுழைவுத் தகுதி மதிப் பெண்கள் குறைந்ததற்கு குறைந்த மாணவர் எண்ணிக் கையும் ஒரு காரணம் என நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள். கோப்புப்படம்