தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் வெஸ்ட் டிரைவ் சாலை விபத்து: ஒருவர் மருத்துவமனையில்

1 mins read
db59a77e-b570-4184-a8c9-ae33d61481df
-

துவாஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் ஜாலான் அகமது இப்ராஹிம், துவாஸ் வெஸ்ட் சாலைச் சந்திப்பில் நேற்றுக் காலை 8.00 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் காயமுற்ற லாரி ஒட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். டுவிட்டர் பயனாளர் ஒருவரால் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பப்பட்ட காணொளியில், ஒரு லாரி சாலையின் வலதுபுற இரு தடங்களையும் மறைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. பேருந்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தக் காணொளி, லாரியின் முன்பகுதி கடுமையாகச் சேதமுற்றிருந்ததையும் சாலையில் சிலர் நின்றுக் கொண்டி ருப்பதையும் காட்டியது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு விபத்து குறித்து காலை 8.20 மணிக்குத் தகவல் கிடைத்தது.