ஜெம் கடைத் தொகுதியில் கூரை ஒழுகியது

ஜெம் கடைத் தொகுதியில் கூரை ஒழுகியது

1 mins read

ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கும் ஜெம் என்ற கடைத் தொகுதியில் நேற்று மதிய சாப்பாட்டு நேரத்தின்போது கூரை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒழுகியதாக சாவ் பாவ் செய்தித்தாள் தெரிவித்தது. முதல் மாடியில் கூரை ஒழுகியதன் காரணமாக அங்கிருந்த துணிக்கடை ஒன்று இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தன் கதவை மூடிவிட்டது. ஜெம் கடைத் தொகுதி 2013 நடுப்பகுதியில் திறக்கப்பட்டது. அது முதல் இத்தகைய பல சம்பவங்கள் அங்கு நிகழ்ந்திருக்கின்றன.