கடந்த ஆண்டு 90.6 விழுக்காட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு அனு கூலங்கள் கொடுத்ததாக மனித வள அமைச்சு நேற்று அறிவித்தது. முந்திய ஆண்டுகளைவிட இந்த விகிதம் சற்று குறைவு. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைச்சு நடத்தும் ஆட் குறைப்பு அனுகூலங்கள் ஆய்வு இதைக் கண்டறிந்தது. கடந்த 2004ம் ஆண்டுக்குப் பிறகு 2015ம் ஆண்டின் விகிதமே ஆகக் குறைவு என்றும் ஆய்வில் தெரிய வந்தது. 2004ம் ஆண்டில் 95.7 விழுக் காட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு அனுகூலங்கள் கொடுத்தன. தொழிற்சங்கங்கள் உள்ள நிறுவனங்களும் குறைந்தது 200 தொழிலாளர்கள் வேலை செய்யும் பெரிய நிறுவனங்களும் ஆட் குறைப்பு அனுகூலங்கள் தரக் கூடிய சாத்தியம் அதிகம் என்றும் ஆய்வு குறிப்பிட்டது.
நிறுவனங்கள் ஆட்குறைப்பு அனுகூலங்கள் கொடுத்தன
1 mins read

