சிராங்கூன் கார்டனை நோக்கிச் செல்லும் லோரோங் சுவானில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பெரிய மரத்தில் மோதியவுடன் தீப்பிடித்துக் கொண்டது (படம்). அந்தக் காரின் ஓட்டுநர் என்று நம்பப்படும் 34 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காரில் தீப்பிடித்துக் கொண்டபோது, அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தின் ஊழியரான 40 வயது கோ எங் ஹோ அங்குள்ள தீயணைப்பானைக் கொண்டு காரின் தீயை மட்டுப்படுத்தினார். பின்னர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை முழுமையாக அணைத்தனர்.
மரத்தில் மோதிய காரில் தீப்பிடித்தது
1 mins read
-

