ஐஎஸ் படையில் சேர சிங்கப்பூர் வந்த இந்தோனீசிய தம்பதி

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாத அமைப்பில் சேர்ந்து போராட முடிவுசெய்து சிங்கப்பூர் வழியாக சிரியா செல்ல எண்ணிய இந் தோனீசிய தம்பதியரைக் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் பாத்தாம் தீவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளது. இருவரும் 40 வயதானவர்கள். ஆடவர் எம்என்ஏ என்றும் மாது எஸ்ஐ என்றுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆடவர் வட சுமத்திரா, மேடானைச் சேர்ந்தவர் என்றும் மாது மேற்கு ஜாவாவில் வசித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் திங்கட்கிழமையன்று ஹார்பர்ஃபிரண்ட் மையத்திற்கு வந்தனர் என்றும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபின் மறுநாள், செவ்வாய்க்கிழமை இருவரும் திருப்-பி அனுப்பப்பட் டதாக இந்தோனீசியாவின் ரியாவ் மாநில போலிஸ் பேச்சாளரான லெஃப்டினண்ட் கர்னல் சப்ரானோ எர்லாங்கா கூறினார். அவர்கள் பாத்தாம் தீவிலிருந்து குவீன்ஸ் ஸ்டார் என்ற வேகப் படகில் சிங்கப்பூர் வந்துள்ளனர். இருவரும் சிங்கப்பூரிலிருந்து சிரியா செல்லும் திட்டத்தில் இருந் துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!