உட்லண்ட்ஸ் அவென்யூ 7ல் வலதுகோடி தடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர், சாலையில் ஒரு பறவையைக் காப்பாற்றினார். வழியில் ஒரு பறவை மிகவும் மோசமாக காயம் அடைந்த நிலை யில் கிடந்ததை அந்த மோட்டார் சைக்கிளோட்டி பார்த்தார். உடனடியாக தன் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையின் நடுப் பகுதிக்குச் சென்று பதற்றப்படா மல் பறவையைக் காப்பாற்றி சாலை நடுவே இருக்கும் தடுப்புச் செடிக்குள் அதை விட்டுவிட்டு தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.
அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திய உடனேயே பின்னால் வந்துகொண் டிருந்த ஒரு கார் ஓட்டி தனது வாகனத்தில் ஒலி எழுப்பினார். அவருக்கும் இதர வாகனங் களுக்கும் நன்றிகூறிவிட்டு அந்த ஆடவர் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி ஃபேஸ்புக் சாலை பாதுகாப்புப் பக்கத்தில் பதிவேற் றப்பட்டது. தன்னுடைய காரில் இருந்து இந்தச் சம்பவத்தை ஹு தியான்ஃபா என்பவர் படம் எடுத் தார்.
உட்லண்ட்ஸ் அவென்யூ 7ல் வலதுகோடி தடத்தில் காயமடைந்து கிடந்த பறவையைக் காக்கும் மோட்டார்சைக்கிளோட்டி. படம்: ஃபேஸ்புக் காணொளி

