முதியவருக்கு உதவிய முழுநேர தேசிய சேவையாளருக்குப் பாராட்டு

நடக்கமுடியாது தள்ளாடிய முதியவருக்கு உதவிய முழுநேர தேசிய சேவையாளர் 21 வயது பிரைவேட் ரென்டின் நியோ வுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகின்றன. தமது சக தேசிய சேவையாளர்களுடன் அவர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த முதியவர் உதவி நாடி அவர்களை அணுகினார். அவர் திரு நியோவின் கையைப்பிடித்து, பல்துலக்கி வாங்க உடன் வருமாறு கேட்டார். அவரது கோரிக்கைக்கு இணங்கிய திரு நியோ, அவரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். "என் நிலையில் எவர் இருந்தாலும் இதைத்தான் செய்வார். தினமும் இதுபோன்ற பல கனிவன்புமிக்க செயல்கள் கவனிக்கப்படாமல் போகின்றன. மற்றவர்களுக்கு உதவும் தன்மை மனிதர்களிடம் இயல்பாகவே உள்ளது," என்றார் திரு நியோ.

முதியவர் கடைக்குச் செல்ல உதவும் பிரைவேட் ரென்டின் நியோ. படம்: ஸ்டோம்ப், ராணுவப்படையின் ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!