‘கேஸ்’ அடுப்பு வெடிப்பு: நான்கு வகை அடுப்புகளை மீட்கிறது எலக்ட்ரோலக்ஸ்

கண்ணாடிகள் உடைந்து சிதறுவதோடு சிறுசிறு வெடிப்புகள் ஏற்பட்டது தொடர்பான சம்பவங்களைத் தொடர்ந்து EGT9637CKP, EGT7637EGP, EGT7637CKP, EGT7627CKP ஆகிய நான்கு ரக கேஸ் அடுப்புகளை எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் மீட்டுக்கொள்கிறது. ஆய்வுக்குப் பின்னர் அடுப்புக்கான முழுத் தொகையையும் நிறுவனம் திருப்பிக்கொடுக்கும். 2014க்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் விற்கப்பட்ட அடுப்புகள் பயன்பாட்டின்போது வெடித்துள்ளன. எனினும் அடுப்பில் கோளாறு இல்லை என்றும் அடுப்புகள் பயன்பாட்டுக்கு ஏற்றவை என்பதற்கான சான்றிதழ் பெற்றவை என்றும் எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் கூறியது.

அடுப்பு வெடிப்பு பற்றி ஸ்பிரிங் சிங்கப்பூருக்கு 2016ல் ஏப்ரலில் வந்த புகாரைத் தொடர்ந்து அடுப்புகளின் விற் பனையை நிறுத்துமாறு எலக்ட்ரோலக்சிடம் கூறப்பட்டது. அதன்பின் இம்மாதம் 4ஆம் தேதி இத்தகைய சம்பவங்கள் பற்றி கூட்டுரிமை வீட்டு மேம்பாட்டாளர் புகார் செய்துள்ளார். ஒரு சம்பவத்தில், பயனீட்டாளர் ஒருவரின் தோலில் மோசமான காயம் ஏற்பட்டதாக தெரிவித்த ஸ்பிரிங் சிங்கப் பூர், உடனடியாக இந்த அடுப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டது. எலக்ட் ரோலக்ஸ் அடுப்பு களை வாங்கியோர் customer-care.sin@electrolux.com என்ற மின்னஞ்சலில் அல்லது 6727-3613/ 6727-3699 ஆகிய தொலைபேசி எண்களில் எலக்ட்ரோலக்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவுடன் தொடர்புகொள்ளலாம்.

கண்ணாடிப் பகுதி வெடித்திருக்கும் ஷெர்லின் லிம்மின் 'எலக்ட்ரோலக்ஸ்' கேஸ் அடுப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!