வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்து திருட முயன்று இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் 47 வயது ஆடவரை போலிஸ் கைது செய்து இருக்கிறது. வெஸ்ட் கோஸ்ட் கிரசெண்டில் இருக்கும் ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் திருட்டுச் செயலில் ஈடுபடுவதாகத் தெரி கிறது என்று இந்த மாதம் 6ஆம் தேதி நண்பகல் 12.14 மணிக்கு போலிசுக்கு தகவல் வந்தது. திருடுவது தெரியவந்ததையடுத்து அந்த ஆடவர் தப்பி ஓடிவிட்டார். அதனையடுத்து கிளமெண்டி பிரிவு போலிசார் பலரிடம் தீவிர விசாரணை நடத்தினர். புலன்விசாரணையும் நடந்தது. சந்தேகப்பேர்வழி அடையாளம் காணப்பட்டார். அதே நாளன்று பிற்பகல் சுமார் 3.15 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் கிரசெண்டில் ஆடவர் கைதானார். புலன்விசாரணை தொடர்வதாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது. திருடுவதற்காக அத்துமீறி நுழைவோருக்கு ஏழு ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
சந்தேக ஆடவர் கைது
1 mins read

