டைகர்ஏர் விமானத்தில் தீய்ந்த வாடை

டைகர்ஏர் நிறுவனத்தின் ஒரு விமானம் 163 பயணிகளுடன் வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 1.55 மணிக்கு தைவானின் தைப்பே நகரிலிருந்து சிங்கப்பூருக் குப் புறப்பட்டது. அந்த விமானம் அன்று மாலை 6.55 மணிக்கு சிங்கப்பூரில் தரை இறங்க இருந்தது. விமானம் பறந்து வந்துகொண்டிருந்தபோது ஏதோ விமானத்தில் பொசுங்கு வதைப் போல வாடை கிளம்பியது. இதனால் விமானம் ஹோ சி மின் சிட்டி நகருக்குத் திருப்பிவிடப் பட்டது. அங்கு விமானம் அன்று பிற்பகல் 4.48 மணிக்குப் பாதுகாப் பாகத் தரை இறங்கியது. பயணிகள் வாடகை விமானம் ஒன்றில் சிங்கப்பூருக்கு வந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணிக்கு தரை இறங் கினார்கள். "டைகர்ஏர் விமானத்தின் டிஆர்2993 சேவை விமானம் 163 பயணிகளுடன் தைப்பேவிலிருந்து சிங்கப்பூருக்கு ஜனவரி 6ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. வழி யில் அது ஹோ சி மின் சிட்டி நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. "விமானி அறையில் ஏதோ பொசுங்குவதுப்போல் வாடை கிளம்பியதே அதற்கான காரணம்.

டைகர்ஏர் விமானத்தில் பயணம் செய்த லாம் வாய் ஊன் என்பவர், விமானச் சிப்பந்திகளை, குறிப்பாக விமானியை (படத்தில் இருப்பவர்) மிகவும் பாராட்டினார். அவர்கள் நிலைமையை அருமையாகச் சமாளித்தார்கள் என்றார் திரு லாம். படம்: லாம் வாய் ஊன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!