ஜனில்: சமூக பங்களிப்பில் இளையர்கள்

சுதா ராமன்

ஈடுபட பங்காளித்துவ ஒத்துழைப்பு முக்கியம் சமூகத்திற்குப் பங்களிக்க இளை யர்கள் முன்வர வேண்டும் என்றும் அவ்வாறு இளையர்கள் ஈடுபட சமூக அமைப்புகளிடையே பங் காளித்துவ ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார் கல்வி, தொடர்பு, தகவல் துணை அமைச் சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி. தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். "இளையர்களுடன் மட்டுமின்றி தனிநபர், நிறுவனங்கள், ஆதரவா ளர்கள் போன்றோருடன் தமிழர் பேரவை, சிண்டா போன்ற சமூக குழுக்கள் சேர்ந்து பங்காளித்துவ முறையிலான ஒத்துழைப்பை ஏற் படுத்த வேண்டும்," என்று வலி யுறுத்தினார் அவர். சமூக குழுக்கள், நன்கொடையா ளர்கள், இளையர்கள் என்ற மூன்று தரப்பினரிடையே உள்ள ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை தமிழர் பேரவை ஆண்டுதோறும் நடத்தும் இந்த கல்வி உதவி நிதி வழங்கும் விழா எடுத்துக் காட்டு வதாகவும் அவர் சொன்னார்.

கல்வி துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, தமிழர் பேரவையின் தலைவர் வெ. பாண்டியன் ஆகியோருடன் கல்வி உதவி நிதி பெற்ற மாணவர்களில் சிலர். படம்: தமிழர் பேரவை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!