‘ஆழமான திறன்களைக் கற்று வாய்ப்புகளைப் பெறுங்கள்’

தடைகள் பல நிறைந்த ஆண்டைத் தொடர்ந்து இந்தப் புதிய உலகில் தழைத்தோங்க தன்னடக்கம், எதி லும் முனைப்புடன் செயல்படுதல், மனிதராக இருப்பது ஆகிய முக் கியக் கூறுகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறி யுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் (என்யுஎஸ்) ஷா அற நிறுவன முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் நடந்தேறிய செயிண்ட் கேலன் கருத்தரங்கில் நேற்று அவர் பேசினார்.

தன்னடக்கத்துடன் இருப்பது என்றால் ஆழமான திறன்களையும் ஆற்றல்களையும் கற்று மேம்படுத்த முயற்சி செய்வதாகும் என்ற அவர், எதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டுமெனில் சிங்கப்பூரர்கள் வசதியான சூழலிலிருந்து வெளி வந்து உள்ளூரிலும் வெளிநாடுகளி லும் வாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். என்றாலும், மனித உணர் வையும் தொடர்பையும் தொடர்ந்து கட்டிக்காப்பது அனைத்திலும் மையமாக விளங்கும் என்ற திரு வோங், மனித உணர்வின் இடத் தைத் தொழில்நுட்பம் ஒருபோதும் நிரப்ப முடியாது என்று சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!