பிரெக்சிட், டிரம்ப் வெற்றி போன்ற அரசியல் அதிர்ச்சிகள் குறித்து துணைப் பிரதமர் தர்மன்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது (பிரெக்சிட்), டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதி பராகத் தேர்வு பெற்றது போன்ற எதிர்பாரா அரசியல் நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கலாம். ஆனால், இவை யாவும் நீண்டகால மாக சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் உருவானவை என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

இவற்றுக்கு வருவாய்த் தேக்கம், சமுதாயத்தில் முன்னேற்றம் குறைந்து வருவது, நாம் அனை வரும் ஒன்று என்ற உணர்வு சமு தாயத்தில் அழிந்து வருவது, அர சியலும் ஊடகங்களும் ஒரே திசை யில் செல்வது என நான்கு போக்கு களைச் சுட்டினார். "இந்தப் போக்கு வளர்ந்த நாடு களிலேயே மிகவும் கவலை தரும் வகையில் அதிகரித்து வருகிறது," என்று அவர் விளக்கினார்.

"இதில் வியப்பு என்னவெனில், சமுதாயத்தில் ஏற்படும் இந்த மாற் றங்கள் அரசியலிலும் எதிரொலிப்ப தற்கு இவ்வளவு காலம் எடுத்தது தான்," என்று அவர் கூறினார். உலக அரசியலில் ஏற்படும் அதிகார மாற்றங்கள், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவை பற்றி லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுக் கழகத்தில் நேற்று உரையாற்றிய திரு தர்மன் மேற்கண்டவாறு கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!