சீன நாட்டுமருந்து, மூலிகை மருந்து பற்றி பொதுமக்களுக்கு விளக்குவதற்காக சிங்கப்பூர் சீன நாட்டுமருந்தாளர்கள் சங்கத்துடன் சேர்ந்து மக்கள் கழகம் மூன்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. 'சீன நாட்டு மருந்து நல்வாழ்வுச் செயல்திட்ட கற்றல் பயணம்' என்ற அந்த முதலாவது நிகழ்ச்சி தோ பாயோ ஈஸ்ட் சமூக மன்றத் தில் நேற்று நடந்தது. அதில் தோ பாயோ ஈஸ்ட் வட்டாரத்தைச் சேர்ந்த 30 இளை யர்களுக்கும் மலாய்க்காரர்களுக் கும் சிங்கப்பூர் சீன நாட்டுமருந்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர் கள் மூலிகைத் தேநீர் தயாரிப்பது போன்றவற்றைக் கற்றுக்கொடுத் தனர். முதியோருக்கு ஏற்படக் கூடிய பொதுவான நோய்கள்,
அவற்றுக்கான மூலிகைச் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றியும் மக்கள் தெரிந்துகொண்டனர். இந்தக் கற்றல் செயல்திட்டத் தின் ஒரு பகுதியாக தோ பாயோ வில் இருக்கும் சைனிஸ் மெடிக்கல் ஹால்ஸ் என்ற மருந்துக்கடைக்கு அவர்கள் சென்றார்கள். அங்கு சீன மூலிகைகள் வெட்டப்பட்டு பதப்படுத்தப்படுவதை அவர்கள் பார்த்து தெரிந்துகொண்டார்கள்.
பிஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சக்தியாண்டி சுபாட் (வலமிருந்து 2வது) சீன மூலிகைத் தேநீரைத் தயாரித்து பார்க்கிறார். படம்: பெரித்தா ஹரியான்