மோசடியைத் தடுக்க சுவரோவியப் போட்டி

மோசடிகள், தில்லுமுல்லுகள் ஆகியவற்றுக்கு எதிராக போலிசுடன் சேர்ந்து இதன் தொடர்பில் செயல்பட செம்பவாங் சமூகத் தினரை ஒன்று திரட்ட செம்பவாங் அக்கம்பக்க போலிஸ் மையம் முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது. அந்த மையம் கேன்பரா அடித் தள அமைப்புகளுடன் சேர்ந்து சுவர் ஓவியப் போட்டி ஒன்றைத் தொடங்கி உள்ளது. கேன்பரா தொகுதியில் வசிக் கும் எல்லா வயதினரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டியாளர்களின் புத்தாக்கத் திறனையும் ஆற்றலையும் மேம் படுத்தி தில்லுமுல்லுகளையும் ஏமாற்றுக்காரியங்களையும் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்தும் வடிவமைப்புகளை அவர்கள் உரு வாக்கும்படி செய்வது இந்தப் போட் டியின் நோக்கம். "இணையம் மூலம் நடக்கும் மோசடிகளைப் பற்றிய புரிந் துணர்வை அதிகப்படுத்த உதவும் புதுப்புது வழிகளைக் காணும்படி நாங்கள் குடியிருப்பாளர்களுக்கு ஊக்கமூட்டி வருகிறோம்," என்று கேன்பரா அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் டாக்டர் லிம் வீ கியாக் கூறினார்.

மோசடிகள் பற்றிய சுவரோவியப் போட்டியை செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியாக்கும் (வலக்கோடி) செம்பவாங் அக்கம்பக்க போலிஸ் மையத்தின் தலைவர் மார்க் லோவும் தொடங்கி வைக்கின்றனர். படம்: கேன்பரா சமூக மன்றம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!