எண்ணெய் ஒழுக்கை அகற்றும் பணி நிறைவடைந்தது

சாங்கி கடற்கரை, உபின் தீவில் இருக்கும் நூர்தீன் கடற்கரை இரண்டையும் சுத்தப்படுத்தும் பணி முடிவடைந்து இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. ஜோகூரில் வியாழக்கிழமை இரவு நேரத்தில் கடலில் எண் ணெய் ஒழுக்கு ஏற்பட்டதன் விளைவாக தார் போன்ற கரும் படலம் சிங்கப்பூர் கடற்கரைகளில் எங்கும் பரவி விட்டது. சாங்கி கடற்கரையின் 800 மீ. பகுதி, துப்புரவுப் பணி காரணமாக மூடப்பட்டு இருந்தது. அது இப் போது பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டு இருக்கிறது. சாங்கி கடற்கரை, பொங்கோல் கடற்கரை, பாசிர் ரிஸ் கடற்கரை ஆகியவற்றில் கடல்நீரை தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் இந்த வாரியம் தெரிவித்து இருக்கிறது. கடல்நீரின் தரம் வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டது என் பது பரிசோதனைகள் மூலம் தெரியவருகின்றது என்று குறிப் பிட்ட இந்த வாரியம், இருந்தாலும் தொடர்ந்து கடல்நீரை தான் கண் காணித்து வரப்போவதாகவும் தெரிவித்தது.

ராம்கி கிளின்டெக் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஒப்பந்தக்காரர்கள் சாங்கி கடற்கரையில் இம்மாதம் 5ஆம் தேதி எண்ணெய்ப் படலங்களை அகற்றினார்கள். கடல்நீரில் எண்ணெய் கலந்ததன் காரணமாக உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!