என்டியுவுக்கு வெளியே விபத்து

பைனியர் ரோடு நார்த் சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் ஒரு தனியார் பேருந்து, ஒரு லாரி உட்பட பல வாகனங்கள் சிக்கின. நேற்று மாலை 6 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்த தாக அறியப்படுகிறது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் 20 வயது மாணவி ஸே„லீன் கோ பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்து நடந்த இடத்தைக் கடந்து சென்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். சாலைத் தடுப்புக்குக் குறுக்கே தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது. அது அந்தத் தடுப்பில் மோதி நின்றது என்று நம்பப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ஒரு லாரியையும் ஒரு வெள்ளை நிறக் காரையும் அந்த மாணவி கண்டார். தீவு விரைவுச்சாலையிலிருந்து பிரியும் பைனியர் ரோடு நார்த்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மாணவி ஸே„லீன் பள்ளிக்குச் செல்ல 20 நிமிடம் தாமதமானது. இதன் காரணமாக ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5க்குப் பிறகுள்ள பைனியர் ரோடு நார்த் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தனது டுவிட்டர் தளத்தில் நேற்றிரவு 7.51 மணிக்கு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!