கள்ளச் சிகரெட்டு நடவடிக்கைகளில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபாடு

தீர்வை செலுத்தப்படாத கள்ளச் சிகரெட்டுகள் தொடர்பான நடவ டிக்கைகளில் ஈடுபடும் வெளி நாட்டு ஊழியர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. வேலையில்லா நேரத்தில் கூடு தலாக பணம் சம்பாதிக்க அவர்கள் இத்தகைய காரியத்தைச் செய் கிறார்கள் என்று சிங்கப்பூர் சுங்கத் துறை அறிக்கை ஒன்றில் தெரி வித்திருக்கிறது.கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இத்தகைய நடவ டிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள் பிடிபட்டனர். இரண்டாவது ஆறு மாதங்களில் பிடிபட்ட ஊழியர் களின் எண்ணிக்கை 12 ஆக இருந்தது. '‌ஷி செங் பிபிஎஸ்', 'விசாட்' போன்ற சமூக இணையத்தளங் களில் ஓய்வு நேரத்தில் வேலை பார்க்கத் தயாராக இருக்கிறோம் என்று அத்தகைய ஊழியர்கள் விளம்பரம் செய்கிறார்கள். இத்தகைய விளம்பரங்களைப் பார்க்கின்ற சட்டவிரோத சிகரெட் கும்பல்கள், அந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி கள்ளச் சிக ரெட்டுகளைக் கொண்டுசெல்ல அவர்களைப் பயன்படுத்துகிறார் கள்.

இத்தகைய ஊழியர்களில் சிலர் தங்கள் முதலாளிகளின் வாகனங்களைக்கூட இத்தகைய சட்டவிரோத காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். சீனாவில் இருந்து இங்கு வேலைக்கு வந்த 36 வயது ஆடவர் ஒருவர் டிசம்பர் 9ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். இவர் 'கியூகியூ' என்ற இணை யத்தளத்தில் தான் வேலைக்குத் தயார் என்று விளம்பரம் செய்திருந் தார். இதைக் கண்டு இவருக்கு ஒருவர் வேலை கொடுத்தார். வேலை கொடுத்தவர் யார் என் பது தெரியவில்லை.

இவர் வசம் இருந்த 2,409 பெட்டி கள்ளச் சிகரெட்டுகளுக்குச் செலுத்த வேண்டிய தீர்வை சுமார் $186,940. பொருள் சேவை வரி $18,820. இந்த விவகாரம் தொடர்பில் புலன்விசாரணை நடக்கிறது. வேறொரு விவகாரத்தில் சீனா வைச் சேர்ந்த இரண்டு ஆடவர் களுக்கு நவம்பர் 14ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவைச் சேர்ந்த 28 வயது ஆடவர் ஒருவர் நவம்பர் 3ஆம் தேதி கைதானார். அவரிடமிருந்து 799 பெட்டிகள் கள்ளச் சிகரெட் கைப்பற்றப்பட்டது. இவற்றுக்குச் செலுத்தவேண்டிய தீர்வையும் பொருள் சேவை வரியும் முறையே, $62,000 மற்றும் $6,240.2017-01-13 06:00:00 +0800

வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட்டு களின் ஒரு பகுதி. படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!