எம்ஆர்டி செயல்திறன் 2016ல் 30% மேம்பட்டது

எம்ஆர்டி ரயில் கட்டமைப்பின் செயல்திறன் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் 30 விழுக்காடு மேம்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு எம்ஆர்டி ரயில்கள் பொது வாக அதிக தொலைவு ஓடிய பிறகே தாமதங்களை எதிர்நோக் கின. அரசாங்கத்தின் ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் இந்த விவரங்கள் தெரியவருகின்றன. சென்ற ஆண்டில் ரயில்கள், 5 நிமிடங்களுக்கும் அதிக தாமதங்க ளுக்கு இடையே 174,000 ரயில்- கிலோமீட்டர் தொலைவுக்கு ஓடின.

இது 2015ஆம் ஆண்டுடன் ஒப்பி டுகையில் 30 விழுக்காடு மேம்பட்ட ஒன்றாக இருக்கிறது. போக்குவரத்து அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பாங் கின் கியோங் நேற்று இந்த விவரங்களை அறிவித்தார். அடிப்படை வசதி பராமரிப்பு பற்றிய மூன்றாவது கூட்டுக் கருத்தரங்குகளில் அவர் உரையாற்றினார். டௌன்டவுன் வழித்தடமே தலைசிறந்த செயல் திறனைக்கொண்ட எம்ஆர்டி வழித்தடமாக இருந்தது. சென்ற ஆண்டில் 5 நிமிடங்க ளுக்கும் அதிக தாமதங்களுக்கும் இடையில் இந்த வழித்தட ரயில்கள் 260,000 ரயில்-கி.மீ. பயணம் செய்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!