பணிப்பெண்ணை மிரட்டிய கட்டுமான ஊழியருக்கு பத்து மாதச் சிறை

ஒரு பணிப்பெண்ணுடன் தான் கொண்ட உடலுறவுக் காட்சியை மறைமுகமாகக் காணொளி எடுத்து அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கட்டுமான ஊழியர் ஒருவருக்கு நேற்று பத்து மாதச் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. அந்தப் பெண் தன்னுடனான உறவை முறித்துக் கொள்வ தாகக் கூறியவுடன் கோபமடைந்த 30 வயது பங்ளாதேஷ் நாட்டவரான மியா எம்டி ஷாஹின், அந்தக் காணொளிகளை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். இந்தோனீசியாவைச் சேர்ந்த 34 வயது பணிப்பெண்ணை கடந்த மாதம் 5ஆம் தேதி மிரட்டிய குற்றத்தை மியா ஒப்புக் கொண்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அவர்கள் இருவருக்கும் ஒன்பது மாதம் உறவு நீடித்தது. டிசம்பர் 5ஆம் தேதி அந்தப் பெண் மியாவுடன் தனது உறவை முறித்துக் கொள்வதாக தொலைபேசியில் கூறினார். ஆனால் அதற்கு சம்மதிக்காத மியா, தாங்கள் சம்பந்தப் பட்ட காணொளியை பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி னார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அந்தப் பெண்ணுக்காக ஃபேஸ்புக்கில் கணக்கு திறக்க உதவிய மியா, பின்னர் அதே ஃபேஸ்புக் கணக்குக்குள் புகுந்து அதன் மறைச்சொல்லை மாற்றினார். அந்த மறைச் சொல்லை அந்தப் பெண் மியாவிடம் கேட்டபோது, அவர் அதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஜனவரி 1ஆம் தேதி தம்மைச் சந்திக்க அந்தப் பெண் மறுத்ததும் மியா அந்தப் பெண்ணின் ஃபேஸ்புக் கணக்கில் தாங்கள் சம்பந்தப்பட்ட பாலியல் காணொளியை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார். காணொளியைப் பார்த்த குடும்ப உறுப்பினர்களும் நண்பர் களும் இது குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரிக்கத் தொடங்கினர். மியாவால் அடுத்தடுத்து பிரச்சினை வரும் எய்று அஞ்சிய அந்தப் பெண் போலிசில் புகார் கொடுத் தார். ஜனவரி 6ஆம் தேதி மியா கைது செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!