விபத்தில் மாண்ட 47 வயது மாது தளரா நம்பிக்கை உடையவர்

பைனியர் ரோடு நார்த் சாலையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கோர விபத்தில் மாண்ட 47 வயது சைக்கிளோட்டியான திருவாட்டி வோங் லாய் செங், வேலைக்கு சைக்கிளில் பயணம் செய்வார் என்றும் அவர் கனிவானவர், தளரா நம்பிக்கை உடையவர் என் றும் அவரது உறவினர் தெரிவித் தார். லியன்ஹ வான்பாவ் சீன நாளி தழ் நேற்று வெளியிட்ட செய்தி யில், திருவாட்டி வோங் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தில் தங்குவிடுதி அலுவலகராகப் பணியாற்றி வந்தார் என்றும் விபத்து நடந்த அன்று வேலை முடிந்து அவர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார் என்றும் கூறினார்கள்.

மாலை 6 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் தனியார் பேருந்து, ஒரு லாரி, நான்கு கார்கள் சம்பந்தப்பட் டிருந்தன என்று போலிசார் ஸ்ட்ரெ ய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். பல கார்களில் பொருத்தப் பட்டுள்ள கேமராக்களின் காணொ ளிகளைப் பார்க்கையில், துணைச் சாலையில் வேகமாக வந்த தனி யார் பேருந்து, சாலையின் மத்தி யில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதி அதை உடைத்தெறிந்து பல கார்களையும் மோதியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!