வெளிநாட்டு வாகனங்களுக்கு $6.40 கூடுதல் கட்டணம்

துவாஸ் அல்லது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழியாக பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு கார்க ளும் கூடுதலாக $6.40 கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரி வித்துள்ளது. "கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மலேசியாவில் பதிவு செய்யப்படாத கார்களுக்கு மலே சியா வசூலிக்கும் கூடுதல் கட் டணமான 20 ரிங்கிட்டை சிங் கப்பூர் நாணயத்துக்கு மாற்றினால் $6.40 என்று காட்டும். "அந்தத் தொகையைத்தான் கூடுதல் கட்டணமாக சிங்கப்பூருக் கும் வரும் அனைத்து வெளிநாட்டு கார்களும் செலுத்த வேண்டும்," என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் விளக்கியது.

இந்தக் கூடுதல் கட்டணத் துடன் வாகன நுழைவு அனுமதிக் கட்டணம், சாலைக் கட்டணம், மின்னியல் சாலைக் கட்டணம் ஆகியவற்றை வெளிநாட்டுக் கார்கள் துவாஸ் அல்லது உட் லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளை விட்டு வெளியாகும்போது செலுத்த வேண்டும். குடிநுழைவுக் கூடங்களில் சோதனை கடவுச்சீட்டு சோதனை ந டந்துகொண்டிரு க் கு ம் போ து , 'ஆட்டோபாஸ்' அல்லது ரொக்க அட்டை மூலமாக மேற்கூறப்பட்ட கட்டணங்களை கார் உரிமையாளர் கள் செலுத்த வேண்டும் என்று நினைவுபடுத்தும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. இந்தக் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த தவறும் முதல் குற்றத் துக்கு வாகனமோட்டிகள் $50 அபராதம் செலுத்த நேரிடும்.

கூடுதல் கட்டணத்துடன் வாகன நுழைவு அனுமதிக் கட்டணம், சாலை வரிகள், மின்னியல் சாலைக் கட்டணம் ஆகியவற்றை வெளிநாட்டுக் கார்கள் துவாஸ் அல்லது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளை விட்டு வெளியாகும்போது செலுத்த வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!