திறனாளர்கள் நிறைந்த நாடுகளின் வரிசையில் சிங்கப்பூருக்கு 2வது இடம்

சிங்கப்பூர் நான்காவது ஆண்டாக திறனாளர்கள் நிறைந்த நாடு களின் வரிசையில் 2வது இடத் தைத் தக்க வைத்துக் கொண் டுள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது. உலக அளவில் 6வது இடத்தைப் பிடித்த ஆஸ்திரே லியா, ஆசிய நாடுகளின் வரிசை யில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளது. 'இன்சியாட்' என்ற பிரபல வர்த்தகப்பள்ளி மேற்கொண்ட ஆய்வில் திறனாளர்கள் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.

முன்னைய ஆண்டுகளைப் போல உலக அளவில் சுவிட் சர்லாந்து முதல் இடத்தில் வந்துள்ளது. சிங்கப்பூருக்கு அடுத்ததாக பிரிட்டன் 3வது இடத்தையும் அமெரிக்கா 4வது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. முதல் பத்து இடங்களில் சுவீடன், டென்மார்க், ஃபின் லாந்து, நார்வே ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஆய்வின் இவ்வாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. தரமான திறனாளர்களை உருவாக்குவது, திறனாளர்களை ஈர்த்து தக்க வைத்துக்கொள்வது போன்ற அம்சங்களின் அடிப் படையில் நாடுகள் வரிசைப் படுத்தப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!