செல்வாக்குமிக்க கடப்பிதழ்: சிங்கப்பூருக்கு இரண்டாமிடம்

சிங்கப்பூரர்கள் உலகின் இரண் டாவது செல்வாக்குமிக்க கடப் பிதழ்களைக் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் கடப்பிதழ் களுக்கான உலகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவ்வகையில் இவ்வாண்டுக் கான பட்டியலை 'அர்ட்டன் கேப்பிட்டல்' நிதி ஆலோசனை நிறுவனம் அண்மையில் வெளி யிட்டது. இதில், 157 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் தகு தியைப் பெற்றுள்ள ஜெர்மனி கடப்பிதழுக்கு முதலிடம் கிடைத் தது. 156 நாடுகளுக்கு விசா இன்றிச் செல்லும் தகுதியைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரும் சுவீடனும் இரண்டாமிடத்தைப் பகிர்ந்துகொண்டன.

கடந்த ஆண்டைவிட சிங்கப் பூர் ஓர் இடம் முன்னேறியது. இதன்மூலம், செல்வாக்குமிக்க கடப்பிதழைக் கொண்ட ஆசிய நாடுகளில் தென்கொரியாவைப் பின்னுக்குத் தள்ளி, சிங்கப்பூர் உச்சநிலையில் அமர்ந்தது. டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர் லாந்து, நார்வே, பிரிட்டன், அமெ ரிக்கா ஆகிய நாடுகள் மூன்றா மிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளின் குடிமக்கள் 155 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!