குறி தவறிப் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு சிங்கப்பூர் ஆடவரின் உயிரைப் பறித்தது

கலிஃபோர்னியாவில் உள்ள துப் பாக்கிப் பயிற்சி நிலையம் ஒன்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது உடலை சிங்கப்பூர் கொண்டு வந்து, இறுதிச் சடங்கு செய்வதற்காக 'gofundme' எனும் இணையப்பக்கம் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. பத்தாயிரம் அமெரிக்க டாலர் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலை யில் நேற்று மாலை வரை 23,000 அமெரிக்க டாலருக்கும் (S$32,700) மேலான தொகை திரட்டப்பட்டது. அமெரிக்க நேரப்படி கடந்த சனிக்கிழமை முற்பகல் 11.35 மணி அளவில் கலிஃபோர்னியாவின் கொரோனாவில் உள்ள 'ராகாஜ் ‌ஷூட்டிங் என்டர்பிரைசஸ்' நிலை யத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்செயலாகக் குண்டு பாய்ந்ததினாலேயே திரு லயனல் டான், 36, என்ற அந்தப் பொறி யாளர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று விசா ரணை அதிகாரிகள் கருதுவதாக 'தி பப்ளிக் என்டர்பிரைஸ்' எனும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

திரு லயனல் டானின் உடலை சிங்கப்பூருக்குக் கொண்டு வர இதுவரை $32,700 நிதி திரட்டப்பட்டு இருக்கிறது. படம்: கோஃபண்ட்மி.காம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!