தைப்பூசத்தில் மொத்தம் 23 இசை ஒலிபரப்பு மையங்கள்

வில்சன் சைலஸ்

இவ்வாண்டு தைப்பூசம் அன்று மூன்று இடங்களில் நேரடி பக்தி இசையுடன் 23 இடங்களில் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். சென்ற ஆண்டு பக்தர்கள் அளித்த ஒத்துழைப்பின் விளை வாக ஒன்பது இசை ஒலிப்பரப்பும் இடங்களிலிருந்து இவ்வாண்டு 23 இடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று தைப்பூச ஏற்பாட்டு குழு நேற்று முன்தினம் தெரிவித் தது. பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ள தைப்பூசத் திரு நாளையொட்டி காவடி எடுப்பவர் களுக்கும் அவர்களின் பிரதிநிதி களுக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெரு மாள் ஆலயத்தின் பிஜிபி மண்டபத் தில் இரண்டு நாட்களுக்கு விளக்கக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவா சப் பெருமாள் ஆலயத்திலிருந்து அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் வரை 11 தண்ணீர் பந்தல் கள் உட்பட பாபு லேன், ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயம், கஃப் ரோடு, செலிகி ரோடு, பிரின்சப் ஸ்திரீட், கிளெமன்சியூ அவென்யூ ஆகிய பல்வேறு இடங்களில் பக் தர்களை உற்சாகப்படுத்தும் பக்திப் பாடல்கள் ஒலிப்பரப்பாகும்.

அதாவது, ஒவ்வொரு 150 மீட்டர் தொலைவிற்கும் இடையே பக்திப் பாடல்களைப் பக்தர்களால் கேட்க முடியும் எனத் தெரிவித்த ஏற்பாட்டு குழு, ஹேஸ்டிங்ஸ் ரோடு, ஷார்ட் ஸ்திரீட், பிராஸ் பசா சாலையின் திடல் ஆகியவை நாதஸ்வரம், தவில், உருமி போன்ற வற்றுக்கான நேரடி இசை மையங் களாக திகழும் என்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!