வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்த ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை

அப்பர் தாம்சன் பகுதியில் அனுமதிக்கப்படாத வடிகால் பணிகளை மேற்கொண்ட குத்தகையாளருக்கு எதிராக பொதுப் பயனீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த டிசம்பரில் இந்த அதிகாரமற்ற வடிகால் மாற்றுவழி பணிகளால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடைகளுக்கு ஆயிரக்கணக்கான வெள்ளி செலவானது. அப்பர் தாம்சன் எம்ஆர்டி நிலைய கட்டுமானத் தளத்தில் ஒப்பந்தக்காரர் சாட்டோ கோக்யோ, தேவைக்குக் குறைந்த அளவிலான தற்காலிக மாற்றுவழி வடிகாலைக் கட்டியதாக கழகம் மேற்கொண்ட விசாரணை காட்டுகிறது.

வடிகாலைக் கட்டுவதற்கு முன்னதாக ஒப்பந்தக்காரர் கழகத்திடம் தெரிவிக்க தவறியதாக அது நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது. கடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாளன்று பெய்த கனத்த மழையைத் தொடர்ந்து அப்பர் தாம்சன் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதில் ஏறக்குறைய எட்டு வியாபாரங் களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதிலும், ஒரு உணவகத்துக்கு கிட்டத்தட்ட $15,000 நட்டம் ஏற்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!