2018ல் நான்கு பெரிய குழந்தை பராமரிப்பு நிலையங்கள்

அடுத்த ஆண்டின் மத்திக்குள் மேலும் நான்கு புதிய பெரிய குழந்தைப் பாராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. குழந்தைப் பராமரிப்பு நிலைய பிரதான நடத்துனர்கள் இந்த புதிய குழந்தைப் பராமரிப்பு நிலை யங்களை 2018ன் மத்தியில் செயல்படுத்துவார்கள். அவற்றில் இரண்டு நிலையங் கள் பொங்கோலில் அமைகின்றன. 1,000 குழந்தைகளைப் பராமரிக்கும் வசதியைக் கொண்ட இந்த இரு நிலையங்களும் இங்குள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையங் களிலேயே ஆகப் பெரியவையாக அமையும் எனக் கருதப்படுகிறது. செங்காங்கில் அமையவுள்ள நிலையம் 400 குழந்தைகளுக்கான இடங்களையும் புக்கிட் பாஞ்சாங் கில் அமையும் நிலையம் 300 குழந்தைகளுக்கான இடவசதியை யும் பெற்றிருக்கும்.

வழக்கமாக வீவக அடுக்குமாடி யின் வெற்றுத் தளத்தில் அமைந் திருக்கும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் பொதுவாக 100 குழந்தைகளே இடம்பெற முடியும். அரசாங்கம் நியமிக்கும் குழந் தைப் பராமரிப்பு நிலைய பிரதான நடத்துனர்களுக்கு மானியம் கிடைப்பதுடன், வீவக வட்டாரங் களில் நிலையங்களை அமைக்க முன்னுரிமையையும் அவர்கள் பெறுவர். எனினும், தகுதிநிலை களை இவை பின்பற்ற வேண்டும். முழு நேர குழந்தைப் பராமரிப்புக் கட்டணம் அதிகபட்சமாக $720 மேல் போகக்கூடாது என்பது தகுதிநிலைகளில் ஒன்று.

செங்காங் ரிவர்சைட் பூங்காவில் கட்டப்படவுள்ள இரண்டு மாடி குழந்தைப் பாரமரிப்பு நிலையம் புழுக் கூடு போன்ற வடிவமைப்பை கொண்டது. சுற்றுப்புறத்துடன் இணைந்த சிறிய குன்றுபோன்று இது வடிவ மைக்கப்பட்டுள்ளது. 3,600 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட இது சராசரி குழந்தைப் பராமரிப்பு நிலையத்தைவிட நான்கு மடங்கு பெரியது. ஓவியரின் சித்திரிப்பில் செங்காங் குழந்தைப் பராமரிப்பு நிலையம். படம்: SKOOL4KIDZ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!