பயங்கரவாத மிரட்டல் கடுமையாக உள்ளது

பயங்கரவாத மிரட்டல் கடுமையாக உள்ளது

1 mins read
f7fd5403-ea02-4bae-b172-c3aef1132ab0
-

உலகமெங்கும் பரவியுள்ள பயங்கர வாத மிரட்டல் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. உண்மை யில் பார்த்தால் பயங்கரவாதிகளின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக சிங்கப்பூரும் உள்ளது. இங்கு மிரட்டல் இருப்பது நிதர்சனம் என்று அதிபர் டோனி டான் கெங் யாம் தெரிவித்துள்ளார். கேலாங் கத்திஜா பள்ளிவாசலில் உள்ள சமய மறுவாழ்வுக் குழுவுக்கு (ஆர்ஆர்ஜி) கீழ் இயங்கும் அதன் வள, ஆலோசனை நிலையத்தை நேற்று திறந்து வைத்த டாக்டர் டான், ஐஎஸ் பயங்கரவாத அமைப் பின் மிரட்டல் எங்கும் பரவத் தொடங்கியதும் சமய மறுவாழ்வுக் குழுவின் நடவடிக்கைகளும் தீவிர மடைந்தன என்று மேலும் கூறி னார்.

"சிங்கப்பூரர்கள் சுய தீவிரவா தப் போக்கையும் இஸ்லாமிய சித் தாந்தத்தைத் தவறாகக் கடைப் பிடிப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் 'ஆர்ஆர்ஜி' துண்டுப் பிரசுரங்கள், பள்ளிவாசல்களில் விளக்கவுரை கள், தற்போதைய நவீன தொழில் நுட்பக் காலக்கட்டத்தில் யூடியுப் போன்ற தளங்களைப் பயன்படுத்தி வெளிவரும் செய்திகள் இளைய சிங்கப்பூரர்களைச் சென்றடைகின் றன.

சமய மறுவாழ்வுக் குழுவின் வள, ஆலோசனை நிலையத்துக்கு நேற்று வருகையளித்த அதிபர் டோனி டான் கெங் யாமுக்கு நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளிக்கிறார் டாக்டர் முகம்மது அலி. சமய மறுவாழ்வுக் குழுவின் இணைத் தலைவர் களான திரு அலி ஹாஜி முகம்மது (இடக்கோடி), திரு முகம்மது ஹஸ்பி ஹசான் (வலக்கோடி) உடன் உள்ளனர். படம்: பெரித்தா ஹரியான்